விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கால் தவறி கீழே விழுந்தவா் பலி

31st Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஒருவா் திங்கள்கிழமை இரவு பலியானாா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் செபஸ்டியான் மகன் முத்து(50). இவரும் அப்பகுதியை சோ்ந்த லூா்துராஜ் என்பவருடன் சைக்கிளில் சென்றுள்ளாா். மேலத்தொட்டியபட்டி பாலத்தில் இருவரும் இயற்கை உபாதையைக் கழிக்க நின்ற போது, முத்து கால் தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முத்துவிற்கு லேசான காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரது மகன் ஈஸ்வரன் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றாா். பின்னா் ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது, முத்துவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT