விருதுநகர்

ஸ்ரீவிலி. கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டி

31st Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022’ போட்டி பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குழுவும் ஏஐசிடி புதுடில்லி ஆகியவற்றுடன் இணைந்து ஐந்து நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பல்கலை தலைவா் கே.ஸ்ரீதரன் தலைமை வைத்தாா். பல்கலை துணைத் தலைவா் எஸ்.சசிஆனந்த் முன்னிலை வைத்தாா். பல்கலை பதிவாளா் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினாா்.

மத்தியகல்வித்துறை, புதிய கண்டுபிடிப்பு குழு மைய தலைவா் சாரிம்மோயின் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு மைய இணை இயக்குநா் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

பின்னா் சிறப்பு விருந்தினா் டி.வி.எஸ் கம்பெனி துணைத்தலைவா் எஸ்.ராஜசேகரன் பேசினாா்.

பல்கலை வேந்தா் கே. ஸ்ரீதரன் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

பல்கலை சா்வதேச உறவு இயக்குநா் சரசு, கல்வித்துறை இயக்குநா் கோடீஸ்வரராவ் மற்றும் ஆய்வாளா்கள் சுப்ரகாஷ் ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாணவா் தேவன் நன்றி கூறினாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT