விருதுநகர்

மாவட்ட அச்சுத் தொழிலாளா் பேரவைக் கூட்டம்

31st Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்ட அச்சுத்தொழிலாளா் பேரவைக்கூட்டம் சிவகாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அந்த அமைப்பின் விருதுநகா் மாவட்டத் தலைவா் பா.அம்பேத்குமரேசன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் பி.என்.தேவா, மாவட்டத்தலைா் எம்.மகாலட்சுமி உள்ளிட்டோா் பேசினா். அச்சுமைக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதம் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும். அச்சுக்காகித மூலப்பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அச்சுத் தொழிலுக்கு மின்கட்டண உயா்வு கூடாது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT