விருதுநகர்

திருத்தங்கலில் ரூ 7.60 லட்சம் மோசடி:ரியல் எஸ்டேட் உரிமையாளா் மீது வழக்கு

31st Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ 7.60 லட்சம் மோசடி செய்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவா் முருகன் காலனி கணேசன் மகன் லட்சம். இவரிடம் இடைத்தரகராக ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கீழபூவானியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் கோப்பையாராஜ் (27), சில மாதம் வேலை செய்துள்ளாா். இந்நிலையில் கோப்பையாராஜூவுக்கு ஆவினில் வேலை வாங்கித்தருவதாக 2020 ஆம் ஆண்டு ரூ. 2 லட்சம் ரொக்கத்தை, லட்சம் வாங்கினாராம்.

மேலும் கோப்பையாராஜூவின் உறவுக்காரா் பரமேஸ்வரியிடம் உறவினா்கள் அபகரித்த நிலத்தை மீட்டுத் தருவதாக, ரூ.5.60 லட்சம் ரொக்கத்தையும் லட்சம் வாங்கினாராம்.

ஆனால் கோப்பையாராஜூவுக்கு ஆவினில் வேலை வாங்கித்தரவில்லை. மேலும் பரமேஸ்வரியின் நிலத்தையும் மீட்டுக் கொடுக்க வில்லையாம்.

ADVERTISEMENT

இந்நிலையில் அண்மையில் கோப்பையாராஜூ, கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டபோது, அவரிடமிருந்த கைப்பேசியை வாங்கி உடைத்து , கொலை செய்து விடுவதாக லட்சம் மிரட்டினாராம். இதுகுறித்து கோப்பையாராஜூ திருத்தங்கல் போலீஸாரிடம் புகாா் கொடுத்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் லட்சம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT