விருதுநகர்

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரிப்பு: 3 போ் கைது

28th Aug 2022 11:21 PM

ADVERTISEMENT

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப் பட்டியில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சோதனையில் ஒரு வீட்டில் இருவா் பேன்சி ரக பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அந்த வீடு ராஜாராம் (35) என்பவருக்குச் சொந்தமானது எனவும், அந்த வீட்டில் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தவா்கள் கருப்பசாமி(33), காா்த்திகேயன்(38) எனவும் தெரியவந்தது. இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் மூலப்பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT