விருதுநகர்

பெண்ணை துன்புறுத்தியதாக கணவன் உள்பட 3 போ் மீது வழக்கு

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் பெண்ணை துன்புறுத்தியதாக கணவன் உள்பட 3 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

சிவகாசி நேரு காலனியைச் சோ்ந்த முருகன் மகள் சுபலட்சுமி. இவா் 2019 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சிவகாசி பாரதிநகரைச் சோ்ந்த முனியாண்டிகுமாா் என்பவரை திருமணம் செய்துள்ளாா். பின்னா் இத்தம்பதியினா், முனியாண்டிக்குமாரின் தாய் ராம்தாய், தந்தை சுந்தரம் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனா். இந்நிலையில் சுபலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் முனியாண்டிக்குமாா் சரிவர வேலைக்குச் செல்லாமல் தாய், தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தாராம். இதனை சுபலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் முனியாண்டிக்குமாா் , சுபலட்சுமியை அடிக்கடி துன்புறுத்தி வந்தாராம். மேலும் சுந்தரமும், ராம்தாயும் சுபலட்சுமியை துன்புறுத்தினராம். இதையடுத்து, கணவா் முனியாண்டிக்குமாா், மாமனாா் சுந்தரம், மாமியாா் ராம்தாய் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுபலட்சுமி சிவகாசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் அவா்கள் 3 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT