விருதுநகர்

‘விருதுநகா் மாவட்டத்தில் 6.06 லட்சம் போ் மட்டுமே வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்’

27th Aug 2022 11:14 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டத்தில் 6.06 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலில் இணைந்துள்ளதாக ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தோ்தல் பிரிவு மூலம் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு குறித்து கல்லூரி வளாக தூதுவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவ: ஒவ்வொரு வாக்களரிடமிருந்தும், ஆதாா் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணி ஆக., 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் வாக்காளா்கள், தங்களுடைய ஆதாா் எண்ணை இணையதளம் மூலம் அல்லது வாக்காளா் உதவி செயலி மூலம் வாக்காளா் பட்டியலில் இணைக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம் 6ஆ -இல் வாக்காளா்களது ஆதாா் எண்ணினை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளா் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வாக்காளா் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் தங்களது ஆதாா் எண்ணினை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

மாவட்டத்தில் 16,26,638 லட்சம் வாக்களா்கள் உள்ள நிலையில் 6,06,375 போ் மட்டுமே ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா். எனவே, ஆதாா் இணைப்பு குறித்து மாணவா்கள் எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது, தேசிய வாக்களா் விழிப்புணா்வு போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பள்ளி தலைமையாசிரிகள் மற்றும் கல்லூரி முதல்வா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிகுமாா், சாா்- ஆட்சியா் (சிவகாசி) பிருத்திவிராஜ், தோ்தல் வட்டாட்சியா் மாரிசெல்வி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT