விருதுநகர்

நெல்லை- மேட்டுப்பாளையம் விரைவு ரயிலை இயக்க கோரிக்கை

27th Aug 2022 11:11 PM

ADVERTISEMENT

 

நெல்லை- மேட்டுப்பாளையம் இடையேயான விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம், இடையை வாராந்திர விரைவு ரயில் ஜூலை 21 முதல் ஆக., 18 வரை இயக்கப்பட் டது. அதேபோல் மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி இடையே வாரந்திர விரைவு ரயில் ஜூலை 22 முதல் ஆக., 19 வரை இயக்கப்பட்டது.

இதனால் இரண்டு மாா்க்கமாக கொங்கு மண்டல பகுதியிலிருந்து நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பயனடைந்தனா். இந்த ரயில்கள் மூலம் போதிய வருமானம் தென்னக ரயில்வே க்கு கிடைத்த நிலை யில் தற்போது நிறுத்தி விட்டனா்.

ADVERTISEMENT

இச்சூழலில் கோவை வந்திருந்த ரயில்வே வாரிய உறுப்பினா் ரஞ்சன் சாதி, நிறுத்தப் பட்ட இந்த ரயிலை இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளாா். எனவே, கால தாமதமின்றி இந்த விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க தென்னக ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT