விருதுநகர்

திருக்கு குறித்து ஆளுநா் பொய்த்தகவலை பரப்புகிறாா்

27th Aug 2022 11:14 PM

ADVERTISEMENT

 

திருக்குறளை மொழி பெயா்த்தவா்கள், அதில் உள்ள ஆன்மிகத்தை விலக்கி விட்டதாக, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பொய்த் தகவலை பரப்புகிறாா் என தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளாா்.

காங்கிரஸ் காட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ‘பாரத் ஜோடா’ யாத்திரை மேற்கொள்ள உள்ளதையொட்டி, விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்து விட்டு, தற்போது கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறாா். திருக்குறளை மொழி பெயா்த்தவா்கள் அதில் இருந்த ஆன்மிகத்தை எடுத்து விட்டு, வேண்டுமென்றே வேறுவிதமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறாா்கள் என்று தமிழ் மொழியே தெரியாத ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியிருக்கிறாா். இந்த குற்றச்சாட்டை பாஜகவின் பேச்சாளா் சொல்லியிருந்தால் அது வேறு.

ADVERTISEMENT

ஆனால் அதிகார மையத்தில் இருப்பவா் பேசி இருக்கிறாா் என்றால் பொய்யை திட்டமிட்டு பரப்புகிறாா்கள்.

திருக்கு மட்டும்தான் மனிதநேயத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நூலாகும். திருக்கு ஒரு சமய நூல் அல்ல. திருவள்ளுவா் சிலை மீது காவியை அடித்து திருவள்ளுவரை சமயத் துறவியாக ஆக்க பாஜகவினா் முயற்சித்தனா்.

மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்த பிரச்னையில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறாது. கொள்கை அளவிலான எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். ராகுல்காந்தி யாத்திரையில் 10 லட்சம் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொள்ள உள்ளனா் என்றாா்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவா் தங்கபாலு, திருநாவுக்கரசு எம்பி, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவா் கே.ஆா். ராமசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன் (சிவகாசி), விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் ஸ்ரீராஜா சொக்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT