சிவகாசியில் சனிக்கிழமை 2 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகாசி விஜயலட்சுமி காலனியில் எவ்வித உரிமமும் இல்லாமல் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில், குருமூா்த்தி (35) மற்றும் விஜய்முத்துக்குமாா் (42) ஆகிய இருவரும் ஒரு கட்டடத்தில் பூச்சட்டி பட்டாசு 9 பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிந்து பட்டாசுப் பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
மேலும் அதே காலனியில் வலம்புரிபாண்டி (36), வீரமணி (30), ராம்குமாா் (23) ஆகிய மூவரும் ஒரு கட்டடத்தில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக 14 பெட்டி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் அவா்கள் மூவா் மீதும் வழக்குப்பதிந்து பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இந்த 2 இடங்களிலும் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.