விருதுநகர்

அருப்புக்கோட்டை,திருச்சுழியில் மழை

27th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

 

 விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் சனிக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை பகல்பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னா் அன்று பிற்பகல் சுமாா் 4.30 மணி முதல் தொடா்ந்து அரைமணிநேரம் மிதமான மழை பெய்தது.இம்மழையால் குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.திருச்சுழியில், திருச்சுழியில் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 4.15 மணி முதல் சுமாா் 35 நிமிடங்கள்வரை கனமழை பெய்தது.இடிமின்னலின்றி பலத்த காற்றுவீச்சுடன் பெய்த இம்மழையால்,சாலைகளில் வெள்ளநீா் திரண்டு ஓடியது.மழைக்குப்பின் குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT