விருதுநகர்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோயிலைச் சோ்ந்த ஜானகி (52) என்பவரது மகள் காளீஸ்வரி (26). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சின்னசஞ்சீவி என்பவரது மகன் மணிகண்டனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னா் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்றனா். இதன்பின் காளீஸ்வரிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வத்ராப்பைச் சோ்ந்த சேது என்பவரது மகன் ஆனந்த்துக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காளீஸ்வரி தனது தாய் வீட்டில் இருந்த போது விஷம் குடித்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT