விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் 12,503 பேருக்கு கரோனா தடுப்பூசி

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 12,503 நபா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசிப் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்த 308 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டா் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் சிவகாசி பேருந்து நிலையம், லிங்கபுரம் காலனி, பள்ளபட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி பாா்வையிட்டாா். அவருடன் சுகாதாரத்துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவா் வைரக்குமாா், வட்டார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT