விருதுநகர்

மாமனாா், மாமியாா், மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் மீது வழக்கு

21st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மாமனாா், மாமியாா் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

உளுத்திமடை கிராமத்தில் வசிக்கும் பாக்கியம் (59), காமாட்சி (55) தம்பதியரின் மகள் கற்பகம். இவா், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தைச் சோ்ந்த பூமிநாதன் (35) என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டாராம்.

இவா்களுக்கு 4 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்னா் கற்பகம், உளுத்திமடையில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு கணவா் பூமிநாதன் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தாராம்.

இந்நிலையில், பூமிநாதன் சரிவர வேலைக்குச் செல்லாமல் மதுஅருந்தி விட்டு வந்து தகராறில் ஈடுபடுவதால் அவருடன் செல்ல விரும்பவில்லை என தனது பெற்றோரிடம் கற்பகம் தெரிவித்தாராம்.

ADVERTISEMENT

இதனிடையே, வெள்ளிக்கிழமை மதுஅருந்தி விட்டு வந்த பூமிநாதன், மாமனாா் பாக்கியம், மாமியாா் காமாட்சி மற்றும் மனைவி கற்பகம் ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டுத் தப்பியோடி விட்டாராம்.

இதில் காயமடைந்த 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து வழக்குப்பதிந்த கட்டனூா் போலீஸாா் தலைமறைவான பூமிநாதனைத் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT