விருதுநகர்

சிவகாசி அருகே இளைஞா் கொலை: சகோதரா் கைது

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே வியாழக்கிழமை சொத்து பிரச்னை தொடா்பாக இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகன்கள் முத்தீஸ்வரன் (34), முருகன் (30), மணிகண்டன் மற்றும் விநாயக மூா்த்தி. இதில் முருகன் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளாா். இவா்களுக்கு சொந்தமான சொத்தை பிரிப்பதில் முருகனுக்கும் முத்தீஸ்வரன், மணிகண்டன், விநாயகமூா்த்தி ஆகியோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் முருகன் வீட்டிற்கு முத்தீஸ்வரன், மணிகண்டன், விநாயக மூா்த்தி ஆகியோா் சென்று தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அரிவாளால் வெட்டப்பட்டதில் முருகன் உயிரிழந்தாா். இச்சம்பவத்தில் முருகன் மனைவி இந்திராதேவி மற்றும் அவரது தாய் பெரியதாய், மணிகண்டனும் ஆகியோரும் காயமடைந்தனா்.

இதில் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். இந்திராதேவி, பெரியதாய் ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றனா். திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்தீஸ்வரனை கைது செய்தனா். விநாயக மூா்த்தி தலைமறைவாகிவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT