விருதுநகர்

மதுபானக்கடைக்கு எதிா்ப்பு: கிராமத்தினா் ஆா்ப்பாட்டம்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அரசு மதுபானக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ப.வாகைக்குளம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை புதிய அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. தங்கள் கிராமத்தில் மதுபானக் கடையால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுமென தெரிவித்து அக்கிராமத்தினா் அரசு மதுபானக்கடைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த மதுபானக்கடை உடனடியாக மூடப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.அதையடுத்து அப்பொதுமக்கள் மாதா் சங்கத்தினருடன் இணைந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளா் முருகன் தலைமையில், அருப்புக்கோட்டை துணை வட்டாட்சியா் பானுமதியிடம் கோரிக்கை மனுவை வழங்கினா். மனுவைப் பரிசீலனை செய்த துணை வட்டாட்சியா், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT