விருதுநகர்

ஸ்ரீவிலி. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லிங்கா குளோபல் பள்ளியில் வியாழக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளித் தாளாளரும், கலசலிங்கம் நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான கே.ஸ்ரீதரன் தலைமை வைத்தாா். இணைவேந்தா் டாக்டா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவா்கள் எஸ்.சசி ஆனந்த், எஸ் .அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இசை ஆசிரியை கீா்த்தனா செந்தில் குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இதில், கிருஷ்ணா் வேடப்போட்டி, நடனப் போட்டி ஆகியவை நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வேந்தா் வழங்கினாா். நிகழ்ச்சியில், முதல்வா் அல்கா சா்மா வரவேற்றாா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT