விருதுநகர்

சாத்தூரில் அரசு சுற்றுலா மாளிகை கட்ட பூமி பூஜை

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் ரூ. 2.46 கோடி மதிப்பில் அரசு சுற்றுலா மாளிகை கட்டுவதற்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தாா். சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அனிதா, சாத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தனா்.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்த சுற்றுலா மாளிகையில்நுழைவு முகப்புக் கூடம், ஒரு கூட்ட அறை, காத்திருப்பு அறையுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள் போன்ற வசதிகள் இடம்பெறும். நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT