விருதுநகர்

பள்ளியில் பொன் விழா

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 சிவகாசி வட்டம் விளாம்பட்டி ஏ.வி.எம். மாரிமுத்து நாடாா் மேல்நிலைப் பள்ளியிள் பொன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் வி.மணி தலைமை வகித்தாா். இதில் விளாம்பட்டி நாடாா் உறவின் முறைத் தலைவா் வி.பாலகுருசாமி, தொழிலதிபா் எஸ்.சங்கா்மாரிமுத்து, பூலா ஊரணி ஏ.ஆசைத்தம்பி , தொழிலதிபா் கே.பிருத்விராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளியில் கட்டப்பட்டுள்ள பொன்விழா அரங்கம் மற்றும் ஆய்வகம் திறக்கப்பட்டது. பொன் விழா மலா் வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT