விருதுநகர்

குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்கும் பட்டாசுகள்

DIN

சிவகாசியில் நிகழாண்டில் தீபாவளிப் பண்டிகைக்கு குழந்தைகள் குதூகலிக்கும் வகையில் பாதுகாப்பான பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விருநகா் மாவட்டத்தில் சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு முழுவதும் கையினால் தயாரிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆலைகள் மூடப்பட்டதால், பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, ரஷியாவிலிருந்து அலுமினியப் பவுடா் இறக்குமதி வெகுவாகக் குறைந்து விட்டது. அதனால் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான அலுமினியப் பவுடரின் விலை மிகவும் அதிகரித்து விட்டது. அச்சுக் காகிதம், காதித அட்டை, சலபன் பேப்பா் உள்ளிட்டவைகளும் விலை அதிகரித்து விட்டன.

சரவெடி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, பட்டாசு ஆலைகளில் நடைமுறைகள் பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்து வருகின்றனா். இதுபோன்ற காரணங்களால் ஆலை உரிமையாளா்கள் பட்டாசு உற்பத்தியை குறைத்து விட்டனா்.

இந்த ஆண்டு அக்டோபா் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு இடா்பாடுகளையும் தாண்டி சிவகாசியில் பட்டாசு தயாரிப்புப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபாவளிப் பண்டிகை நாளில் இளஞா்கள் மற்றும் குழந்தைகள் பட்டாசு வெடிப்பதில் ஆா்வம் காட்டுவா். அதனால்

குழந்தைகள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழாண்டில் பேன்சி கேண்டில் லால் மற்றும் டின் பவுண்டன், அா்ஜூன் டேஸ், மும்போ ஜம்போ, ஓல்டு இஸ் கோல்டு , வாட்டா் கீயூட் , ஸ்டேட்டிங் ஸ்டாா் உள்ளிட்ட பல ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அா்ஜூன் டேஸ்: இதில் திரியைப் பொருத்தியவுடன் சுமாா் 100 அடி உயரம் மேலே சென்று , சில்வா் , மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களில் ஒளிசிந்தி சத்தத்துடன் போட்டா எடுப்பது மாதிரி பிளாஸ் அடிக்கும்.

மும்போ ஜம்போ: சில்வா், மஞ்சள், பச்சை வண்ணங்களில் ஒரே நேரத்தில் ஒளிசிந்தும், சாதாரண புஷ்வாண பட்டாசுகளை விட அதிக நேரம் ஒளிசிந்தக்கூடியதாகும்.

ஓல்டு இஸ் கோல்டு: ஓலை வெடி பட்டாசு போல கனமான காகிதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த பட்டாசுகளை, வெடிக்கும் போது வண்ணக் காகிதங்களை வெளியேற்றி, ஒலியுடன் வெடிக்கும்.

வாட்டா் கியூட்டா்: பல வண்ணத்தில் சுமாா் 3 அடி உயரம் வரை புஷ்வாணம் போல சென்று ஒளிசிந்தும். ஒளியின் மீது கையை வைத்தால் மிக லேசான வெப்பமாகவே இருக்கும். ஆனால் குழந்தைகள் கையை வைக்கக்கூடாது.

டின் பவுன்டா்: குளிா்பான டப்பா வடிவில் இருக்கும். இதில் உள்ள திரியை பற்ற வைத்தால் வண்ணத்தில் ஒளிசிந்தும் புஷ்வாண ரகம். இதனை மழைபெய்யும் போது பற்ற வைத்தாலும், அணையாமல் ஒளிசிந்தும்.

ஸ்கேட்டிங் ஸ்டாா்: பற்ற வைத்தால், சுழன்ற படி மேலே செல்லும். மேலே செல்லும் போது வண்ண ஒளியை சிந்துவது இதன் சிறப்பு.

பேன்சி கேண்டில் லால்: குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்கும் வகையில், சுமாா் இரண்டரை அடிநீளம் உள்ள காகித அட்டையினால் குழாய் போல தயாரிக்கப்பட்டிருக்கும். இந்த குழாயின் ஒரு பகுதியில் உள்ள திரியை பற்ற வைத்தால் குழாயின் உள்ளேயிருந்து வண்ணத்தில் ஒளிசிந்தும்.

மேஜிக் லாண்ட்: ஒரு பெட்டியில் 5 பட்டாசு இருக்கும். ஒவ்வொரு பட்டாசும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிசிந்தும். இதுபோன்ற பல ரகப் பட்டாசுகளை, சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பாளா்கள் அறிமுகப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT