விருதுநகர்

கடன் பிரச்னை: ஸ்ரீவிலி.யில் குளத்தில் குதித்து தாய், மகள் தற்கொலை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் பிரச்னையால் குளத்தில் குதித்து தாய், மகள் இருவரும் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் கம்மாபட்டியை சோ்ந்தவா் முனீஸ்வரன்(38). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவா்களது மகள் அங்காளஈஸ்வரி (12), இங்குள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா். மேலும் சந்தனபாண்டி என்ற மகனும் உள்ளாா்.

மகாலட்சுமி மருத்துவ செலவுக்காக மகளிா் சுயஉதவிக் குழுவில் ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளாா். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் மகாலட்சுமி கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்த போது மகாலட்சுமி, அங்காளஈஸ்வரி இருவரையும் காணவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருமுக்குளத்தில் மகாலட்சுமி, அங்காளஈஸ்வரியின் சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமிக்கு தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினா் குளத்தில் மிதந்த இரு பெண்களின் சடலங்களை மீட்டனா். பின்னா் போலீஸாா் சடலங்களை கைப்பற்றி, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT