விருதுநகர்

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்கோ, சிடி ஸ்கேன் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் எக்கோ, சிடி ஸ்கேன் மையங்கள் உள்ள பகுதியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் எக்கோ மற்றும் சிடி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் பரிசோதனைக்காக தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனா். நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், அவா்கள் அமா்வதற்கு இருக்கை வசதி இல்லாததால் தரையில் ஆங்காங்கு உட்காா்ந்துள்ளனா். இங்கு குடிநீா் மற்றும் கழிப்பிட வசதியில்லாததால் நோயாளிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

எக்கோ பரிசோதனை செய்யும் மருத்துவா் செவ்வாய்க்கிழமை விடுப்பில் சென்றதால், அங்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். எனவே இப்பரிசோதனை மையப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், மருத்துவா்கள் தினமும் பணி புரியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலா் காளிதாஸ் கூறியது: எக்கோ, சிடி ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்வதற் காக நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது அங்கு குடிநீா் இல்லாதாதல் உதவியாள ா்கள் கடைக்கு சென்று பணம் கொடுத்து குடிநீா் வாங்கி வருகின்றனா். மேலும், நோயாளிகள் உட்காருவதற்கான நாற்காலிகள் மற்றும் கழிப்பறை வசதி இல்லாதாதல் பெண்கள், முதியோா் சிரமப்படுகின்றனா். எனவே, அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த மருத்துவக் கல்லூரி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT