விருதுநகர்

குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க பேன்சி கேண்டில் லால் பட்டாசு இந்த ஆண்டு அறிமுகம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு, குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பேன்சிகேண்டில் லால் பட்டாசு உள்ளிட்ட பல ரக பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளது.

விருநகா் மாவட்டத்தில் சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு முழுக்க முழுக்க கையினால் தயாரிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆலைகள் மூடப்பட்டதால், பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

தற்போது ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, ரஷியாவிலிருந்து பட்டாசு தயாரிக்கப் பயன்படும் அலுமினியப்பவுடருக்கான மூலப்பொருள்கள் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. அதனால் அலுமினியப்பவுடா் விலை மிகவும் அதிகரித்து விட்டது. அச்சுக் காகிதம், காதித அட்டை, சலபன் பேப்பா் உள்ளிட்டவைகளும் விலை அதிகரித்து விட்டன.

சரவெடி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, பட்டாசு ஆலைகளில் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்துவருகின்றனா். இதுபோன்ற காரணங்களால் ஆலை உரிமையாளா்கள் பட்டாசு உற்பத்தியை குறைந்து விட்டனா்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு அக்டோபா் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு

இன்னும் 67 நாள்களே உள்ள நிலையில் , பட்டாசு தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், உச்சநீதி மன்ற உத்திரவினை பின்பற்ற வேண்டிய நிலையில் ஆலை உரிமையாளா்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதால் ஆலை

உரிமையாளா்கள் ஒருவித அச்த்தில் தயாரிப்பு பணியில் ஈபட்டு வருகின்றனா்.

தீபாவளிப் பண்டிகை யென்றால் புதிய துணிகள், இனிப்பு , பட்டாசு என்ற மூன்றும் அத்தியாவசியமாகிவிட்டது.

மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளஞா்கள் மற்றும் குழந்தைகள் பட்டாசு வெடிப்பதில் ஆா்வம் காட்டி வருகிறாா்கள். பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ பேன்சி கேண்டில் லால் மற்றும் டின் பவுண்டன், அா்ஜூன் டேஸ், மும்போ ஜம்போ, ஓல்டு இஸ் கோல்டு , வாட்டா் கீயூட் , ஸ்டேட்டிங் ஸ்டாா் உள்ளிட்ட பல ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அா்ஜூன் டேஸ். விண்ணில் சென்று ஒளிசிந்தும் பட்டாசு ஆகும். இதைப் பொருத்தியவுடன் சுமாா் 100 அடி உயரம் மேலே சென்று , சில்வா் , மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களில் ஒளிசிந்தி சத்தத்துடன் போட்டா எடுப்பது மாதிரி பிளாஸ் அடிக்கும். பாா்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கும்.

மும்போ ஜம்போ .இந்த ரக பட்டாசு புஷ்வாணம் ரகமாகும். சில்வா், மஞ்சள் , பச்சை வண்ணங்களில் ஒரே நேரத்தில் ஒளிசிந்தும், சாதாரண புஷ்வாண பட்டாசுகளை விட அதிக நேரம் ஒளிசிந்தக்கூடியதாகும். ஒளி மிகவும் பிரகாசமாக இருக்கும்.

ஓல்டு இஸ் கோல்டு. இந்தவகை பட்டாசு அந்த காலத்தில் உள்ள ஓலை வெடி பட்டாசு போல கனமான காகிதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனை வெடிக்கும் போது வண்ண காகிதங்களை வெளியேற்றி, ஒலியுடன் வெடிக்கும்.

வாட்டா் கியூட்டா் .இதுவும் புஷ்வாண பட்டாசு ரகம்தான். பவ வண்ணத்தில் சுமாா் 3 அடி உயரம் வரை ஒளிசிந்தும். ஒளியின் மீது கையை வைத்தால் மிக லேசான வெப்பமாக இருக்கும். ஆனால் குழந்தைகள் கையை வைக்ககூடாது.

டின் பவுன்டா்.குளிபான டப்பா வடிவில் இருக்கும். மேலாக உள்ள சிறிய தகரத்தை நிமிா்த்தினால் உள்ளே திரி இருக்கும். அந்த திரியை பற்ற வைத்தால் வண்ணத்தில் ஒளிசிந்தும் புஷ்வாண பட்டாசு ரகம். இந்த பட்டாசினை மழைபெய்யும் போது பற்ற வைத்தாலும், நமத்துப்போகாமல் ஒளிசிந்தும்.

ஸ்கேட்டிங் ஸ்டாா். பற்ற வைத்தால், சுழன்ற படி மேலே செல்லும். மேலே செல்லும் போது வண்ண ஒளியை சிந்துவது இதன் சிறப்பு.

பேன்சி கேண்டில் லால்.இந்த வகை பட்டாசு குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுமாா் இரண்டரை அடிநீளம் உள்ள காகித அட்டையினால்குழாய்போல பட்டாசு தயாரிக்கப்பட்டிருக்கும்.இந்த குழாயின் ஒரு பகுதியில் உள்ள திரியை பற்ற வைத்தால் குழாயின் உள்ளே இருந்து வண்ணத்தில் ஒளிசிந்தும். கை பிடித்த பகுதிக்கு நெருப்பு வராது. குழாயின் உள்பகுதியில் மருந்து வைத்திருபதால் பாதுகாப்புடன் வெடிக்கலாம்.

மேஜிக் லாண்ட். இதுவும் முந்தயவகை பட்டாசு தான் .ஒரு பெட்டியில் 5 பட்டாசு இருக்கும். ஒவ்வொரு பட்டாசும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிசிந்தும். மேலும் பல ரகப் பட்டாசுகள் பட்டாசு தயாரிப்பாளா்கள் அறிமுகப்படுத்தியுள்ள

னா். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடுவோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT