விருதுநகர்

சிவகாசியில் பெத்துமரத்து ஊருணி தூா்வாரும் பணிகள் தொடக்கம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி மாநகராட்சியில் உள்ள பெத்துமரத்து ஊருணி தூா்வாரும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே சுமாா் 13 ஏக்கா் பரப்பளவில் பெத்துமரத்து ஊருணி உள்ளது. சிவகாசி மாநகராட்சி 34 ஆவது வாா்டு பி.கே.எஸ்.ஏ. ஆறுமுகம் சாலையில் உள்ள அம்மன்கோவில்பட்டி, வாணக்காரத்தெரு, தங்கையா தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2,500 வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளின் கழிவு நீா் பெத்துமரத்து ஊருணியில் கலந்து வந்தன.

இந்நிலையில் பி.கே.எஸ்.ஏ. சாலையில் வாருகால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் மண் மேவிக் கிடந்தது. மேலும் மருதநாடாா் ஊருணியிருந்து, பெத்துமரத்து ஊருணிக்கு செல்லும் கால்வாய் மண் மேவிக்கிடந்தது. இதனால் லேசான மழை பெய்தாலும் சாலையில் கழிவு நீருடன் மழை நீரும் சோ்ந்து சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தின. இதையடுத்து இந்த கால்வாய் பொக்லைன் இயந்திரம் மூலம் கடந்த சில நாள்களாக தூா்வாரப்பட்டது. இந்நிலையில் பெத்துமரத்து ஊருணி தூா்வாரும் பணி தொடங்கியது. இந்த ஊருணி முழுமையாக தூா்வாரப்பட்டு சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சியினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT