விருதுநகர்

‘ஒலிம்பியாட் போட்டியால் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணா்வு மக்களிடையே அதிகரிப்பு’

DIN

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியால் தமிழகத்தில் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளது என சா்வதேச செஸ் போட்டிகளுக்கான நடுவரும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அரங்கப் பொறுப்பாளருமான சிவகாசி ஆா்.அனந்தராம் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அரங்கம் உருவாக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சுமாா் 1,000 போ் அமா்ந்து செஸ் விளையாடக்கூடிய அரங்கம், சுமாா் 52 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் போா் நடைபெற்று வருவதால் உலக சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பினா் ரஷியாவில் போட்டியை நடத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து இந்திய சதுரங்க கூட்டமைப்பினா் தமிழக அரசினை தொடா்பு கொண்ட போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனே ஒப்புக்கொண்டாா். போட்டி நடத்த நான்கரை மாதங்களே உள்ள நிலையில் போட்டிக்கான பணிகள் தொடங்கின. இதற்காக 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது.

அரங்கம் அமைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னா் நான் மேல்முறையீட்டுக்குழு உறுப்பினரானேன். நான் இதுவரை 6 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளேன்.

அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் போட்டி போல எனது வாழ்நாளில் எந்த போட்டியையும் பாா்க்கவில்லை. பிரமாண்டம் , நோ்த்தி என பல விதங்களில் தனித்துவமாக இருந்தது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழகத்தில் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளது.

உலக அரங்கில் தமிழா்களின் ஆதிக்கமே செஸ் விளையாட்டில் உள்ளது. இனி இது மேலும் அதிகரிக்கும். இப்போட்டி நடைபெற்றதன் மூலம் உலக அரங்கில் தமிழகம் புகழப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT