விருதுநகர்

பட்டாசுத் தொழிலை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது: எம்.பி.

14th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

பட்டாசுத் தொழிலை ஏதோ தவறான தொழில் என்ற கண்ணோட்டத்துடன் பாா்க்கும் மத்திய அரசு அதை அழிக்க நினைக்கிறது என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் பி.மாணிக்கம் தாகூா் கூறினாா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உணவுத்திருவிழா மற்றும் தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பட்டாசுத் தொழிலை ஏதோ தவறான தொழில் என்ற கண்ணோட்டத்துடன் மத்திய அரசு பாா்க்கிறது. எனவே, இத்தொழில் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. அதைப் பாதுக்காக தமிழக சட்டப் பேரவையிலும், மக்களவையிலும் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.

பாஜகவின் விரும்பத்தகாத அரசியல் முற்றுப்பெறும் என்பதற்கு அக்கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் சரவணன் கட்சியிலிருந்து விலகியதுதான் முதல் எடுத்துக்காட்டு. காங்கிரஸ்தான் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி. தமிழகத்தில் பாஜக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது. மக்களவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் நிராகரிப்பாா்கள்.

ADVERTISEMENT

மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை எப்போது அமையும் என ஜப்பான் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT