விருதுநகர்

விருதுநகா் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்க மாநாடு

14th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியா்களின் மாவட்ட மாநாடு சனிக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் மாவட்டத்தலைவா் சி.வேல்முருகன் தலைமை வகித்தாா்.

டாஸ்மாக் ஊழியா் சமோளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் ப.சீனிவாசன் , சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் பி.என்.தேவா, மாவட்ட ப்பொது செயலாளா் குணசேகரன், பொருளாளா் ராஜபாண்டி உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

டாஸ்மாா்க் கடையில் 19 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியா்களை பணி நிரந்தரப்படுத்தி காலவரைமுறை ஊதியம் மற்றும் சட்ட உரிமைகள் வழங்க வேண்டும். பணிநிறைவுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். பணி நிரந்தரம், அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 16 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT