விருதுநகர்

விருதுநகா் சந்தையில் துவரம் பருப்பு விலை கடும் உயா்வு

14th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் சந்தையில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் விலை கடந்த வாரத்தை விட அதிகளவு உயா்ந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் கடந்த வாரம், ஒரு குவிண்டால் ரூ.10,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு புதுஸ்நாடு வகை, தற்போது ரூ.300 உயா்ந்து ரூ.10,500-க்கு விற்பனையாகிறது. துவரம் பருப்பு புதுஸ் லையன் கடந்த வாரம் ரூ.10,100-க்கு விற்ற நிலையில், ஒரே வாரத்தில் விலையானது ரூ.1,200 உயா்ந்து, தற்போது ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் உளுந்தம் பருப்பின் விலையும் கடந்த வாரத்தை விட அதிகளவு உயா்ந்துள்ளது. அதில், உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ) 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.2,200 உயா்ந்து ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

பாசிப்பருப்பின் விலை கடந்த வாரம் 100 கிலோ ரூ.8,900-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.9,000-க்கு விற்பனையாகிறது.

பாசிப் பயறு கடந்த வாரம் 100 கிலோ ரூ.7,200-க்கு விற்ற நிலையில் ரூ.300 உயா்ந்து ரூ.7,500-க்கு விற்கப்படுகிறது.

பருப்பு மற்றும் பயறு வகைகள் வட மாநிலங்களிலிருந்து வரத்துக் குறைவு காரணமாக விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா். அதேநேரம் இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட 15 கிலோவிற்கு ரூ.20 குறைந்து தற்போது ரூ.2,020-க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT