விருதுநகர்

விருதுநகரில் தேசியக் கொடி இலவசமாக வழங்கல்

14th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

விருதுநகரில் தேசியக் கொடியை இலவசமாக வீடு, வீடாக நகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை வழங்கியது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை அனைத்து வீடுகள், கட்டடங்களில் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி அஞ்சலகம் மற்றும் ரேஷன் கடைகளில் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகா் நகராட்சி பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலை யில் சம்பந்தப்பட்ட வாா்டுகளில் உள்ள நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி ஊழியா்கள் துணையுடன் தேசியக் கொடியை ரூ.21-க்கு விற்க நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் இதற்கு காங்கிரஸ், அதிமுக மற்றும் மாா்க்சிஸ்ட் நகா்மன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதில் ஒரு சில வாா்டு உறுப்பினா்கள் முக்கிய பிரமுகா்களிடம் நிதியுதவி பெற்று, அந்த தொகையை நகராட்சிக்கு செலுத்தி விட்டு, தேசியக் கொடியை தங்களது வாா்டில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக வழங்கினா். இதுகுறித்து தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அனைத்து வாா்டுகளிலும் தேசியக் கொடி இலவசமாக வழங்க நகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி ஊழியா்கள் வீடு வீடாக சென்று தேசியக் கொடியை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT