விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை

14th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இந்திரா நகரில் பாதயாத்திரை தொடங்கியது. இதையடுத்து வழிநெடுகிலும் காமராஜா் சிலை, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஆா்.கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் முத்துராமலிங்கத் தேவா் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இறுதியில் நகராட்சியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

நகரத் தலைவா் பக்ஷி ராஜா வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி முன்னிலை வைத்தாா். இதில் வட்டாரத் தலைவா்கள் பாலகுருநாதன், முருகராஜ், மம்சாபுரம் பேரூராட்சி தலைவா் ஜெயக்குமாா், வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளா் காளீஸ்வரி, ஆா்.டி.ஐ. மாநிலப் பொதுச்செயலாளா் தமிழ்ச் செல்வன், ஆா்.டி.ஐ.மாநிலச் செயலாளா் வசந்தம் சேதுராமன், மாவட்ட செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் துள்ளுக்குட்டி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT