விருதுநகர்

சிறுமிக்குபாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் இருவா் கைது

14th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞா்களை போக்சோ வழக்கில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கட்டங்குடி அம்பேத்கா் குடியிருப்பில் வசிப்பவா் சரவணன்(26). இவா் ஆதரவற்ற 5 வயது சிறுமியை தனது பாதுகாப்பில் வளா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சரவணன் மற்றும் அவரது நண்பா் பெரியண்ணன் ஆகியோா் சோ்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். மேலும் சிறுமிக்கு சூடு வைத்தும் சித்ரவதை செய்ததாக குழந்தைகள் நல அமைப்பினா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற அருப்புக்கோட்டை மகளிா் போலீஸாா் சிறுமியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சரவணன் மற்றும் பெரியண்ணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT