விருதுநகர்

நகை பறித்த வழக்கு: 2 பேருக்கு தண்டனை

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகரில் நடந்து சென்ற பெண் வங்கி ஊழியரிடம் நகையை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 3 ஆண்டுகளும், மற்றொருவருக்கு இரண்டு ஆண்டுகளும் சிறை தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயராணி. இவா் விருதுநகரில் தங்கி தனியாா் வங்கியில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, நவ. 30 ஆம் தேதி விருதுநகா் மேற்கு ரதவீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு போ், அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது தொடா்பாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் மற்றும் யோகானந்தன் ஆகியோரை விருதுநகா் பஜாா் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு, விருதுநகா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் எண் 1-இல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட ரவி என்ற ரவிச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், யோகானந்தனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கவிதா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT