விருதுநகர்

விருதுநகரில் முதியோா் பாதுகாப்பு விழிப்புணா்வு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகரில் மூத்த குடிமக்கள் மற்றும் தனியாக குடியிருக்கும் முதியோா்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு தகவல்களை போலீஸ் அதிகாரிகள் வழங்கினா்.

விருதுநகா் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.சி.ஏ. காலனியில், விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜ சுலோசனா முன்னிலையில் முதியோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தனியாக வசிக்கும் முதியோா்கள் தங்களது பாதுகாப்புக் கருதி வீட்டில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேக நபா்கள் நடமாட்டம், வெளியூா் செல்லும் போது அதுகுறித்த தகவல்களை காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இணையதளப் பணப்பரிவா்த்தனைகளில் மூலம் பாதிக்கப்பட்டால் அதுகுறித்து 1930 என்ற எண்ணில் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் காவல் உதவி செயலியை அனைவரும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர காலங்களில் 93422 59833 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

இதில் ஏராளமான பெண்கள் மற்றும் முதியோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT