விருதுநகர்

வீரசோழன் அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சுழி தாலுகாவிற்குள்பட்ட வீரசோழன் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட பகுதியில் அன்னலெட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள மந்தையம்மன் கோயில், சோனையா கோயிலில் பூஜை நடத்துவது தொடா்பாக ராமமூா்த்திக்கும், ராமருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராமா் மகனான சந்திரன் தரப்பினரை ஜெயராமன் தரப்பினா் தாக்கியதில் இருளாயி, குமுதம், பவித்ரா, தா்மா் உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக இரு தரப்பு மீது வீரசோழன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சந்திரன் (56), சுப்பிரமணியன் (60) மற்றும் அய்யம்முருகன் (32) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஜெயராமன், சிவக்குமாா், வடிவேலு, விக்னேஷ்வரன், அஜித்குமாா் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா். இச்சூழலில் இக்கிராமத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT