விருதுநகர்

ஆடி கடைசி வெள்ளி: ரிஷப வாகனத்தில் இருக்கன்குடி மாரியம்மன் வீதியுலா

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகளும் தீபாதாரனைகளும் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலா் கருணாகரண், பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்திபூசாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT