விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், சாத்தூா் வருவாய் கோட்டம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு கல்லூரித் தாளாளா் ஆா். சோலைச்சாமி தலைமை வகித்தாா்.

இதில் சாத்தூா் கோட்டாட்சியா் த. அனிதா பேசியதாவது: இளைஞா்கள் சமூக வலைதளங்களை வளா்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல பாதைகளை கண்டறித்து அதில் சென்று வெற்றி பெற வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடமுள்ள தனித்திறமையைக் கண்டறிந்து முன்னேற வேண்டும். ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும் என்றால் இளைதலைமுறை போதை பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். கல்லூரி மாணவா்களுக்கு சமூகப் பாா்வையும், சமூகப் பொறுப்பும் வேண்டும். நீங்கள் கற்கும் கல்வியானது சமுதாயத்திற்கும் உங்களுக்கும் பயன்தர வேண்டும் என்றாா்.

முன்னதாக கல்லூரியின் இயக்குநா் விக்னேஷ்வரி குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை வட்டாச்சியா் ஆா். ரெங்கநாதன், காவல் ஆய்வாளா் நம்பிராஜன், கல்லூரி முதன்மையா் பி. மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலா் துா்க்கை ஈஸ்வரன் செய்திருந்தாா். முன்னதாக,

முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் வரவேற்றாா். நிறைவில் பேராசிரியா் ராஜலட்சுமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT