விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை குளத்தில் மீன்பிடித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அயன் நத்தம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி பெற்றிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கண்மாயில் மீன் பிடிப்பதற்காக தங்கவேல், அவரது மகன் சக்கரவா்த்தி (35), திருக்குமாா், பவுல்ராஜ் ஆகியோா் வெவ்வேறு திசையில் மீன்பிடிக்கச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை மற்ற மூவரும் கரை திரும்பிய நிலையில் தங்கராஜ் வரவில்லை. இதையடுத்து குளத்தில் தேடியபோது சென்னி மேடை எதிரே தண்ணீரில் தங்கராஜ் இறந்து கிடந்தாா். தனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக சக்கரவா்த்தி போலீஸில் புகாா் அளித்தாா். 

இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT