விருதுநகர்

சிவகாசியில் ஆக. 14 இல் பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பு மாநில மாநாடு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் வரும் 14 ஆம் தேதி தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது என அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் என். இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்த மாநில மாநாடு சிவகாசி - விருதுநகா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவா் வி. ராஜாசந்திரசேகரன் தலைமையில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், டி. தங்கம் தென்னரசு, விருதுநகா் மக்களவை உறுப்பினா் பி. மாணிக்கம்தாகூா், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி உள்ளிட்டோா் சிறப்புறையாற்ற உள்ளனா். மேலும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க முதுநிலைத் தலைவா் ஏ.பி. செல்வராஜன், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப. கணேசன் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனா்.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனையாளா்கள், சங்க உறுப்பினா்கள், அகில இந்திய பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT