விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவி கொலை: கணவா் கைது

12th Aug 2022 10:36 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணன்கோவில் அருகே உள்ளது நாச்சியாா்புரம். இப்பகுதியைச் சோ்ந்தவா் அழகேந்திரன் (29). இவா் கோழி பண்ணை வைத்துள்ளாா். இவரது மனைவி அன்பரசி (28). இந்நிலையில், அழகேந்திரன் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி தனது மனைவியை கொலை செய்ததாக கூறியதன் பேரில் போலீஸாா் அவரை கைது செய்து அவரது கோழிப்பண்ணைக்கு சென்று அங்கு சடலமாக கிடந்த அன்பரசியின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எதற்காக மனைவியை கொலை செய்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். அழகேந்திரன்- அன்பரசி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT