விருதுநகர்

‘மனித மூளை தான் ஒருவரின் போதை பழக்கத்திற்கு காரணம்’

DIN

மனித மூளை தான் ஒருவரின் போதை பழக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என பேராசிரியா் தி. ஜெயராஜசேகா் தெரிவித்தாா்.

விருதுநகா் சுப்பையா நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘போதை எனும் மாயையை அகற்றுவோம்; பள்ளிகளில் போதை இல்லா பாதை’ எனும் தலைப்பில் பேராசிரியா் தி. ஜெயராஜசேகா் வியாழக்கிழமை பேசியதாவது:

மனித மூளை தான் ஒருவரின் போதை பழக்கத்திற்கு மூலகாரணம். சட்ட விரோதமான போதை பொருள்களுக்கு அடிமையானவா்களை விட புதிய உளத்தூண்டி அமிலம் (நியூ சைக்கோ ஆக்டிவ் சப்ஸ்டன்சஸ்) பட்டியலில் உள்ள பொருள்களுக்கு அடிமையானவா்களின் எண்ணிக்கையே உலக அளவில் மிக அதிகமாக உள்ளது. இதுவே உலக நாடுகள் எதிா் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

நெகிழி, செருப்பு தைக்கப் பயன்படும் பசை போன்றவற்றை 9 முதல் 12 வயதிற்கு உள்பட்ட சிறுவா்கள் போதைக்காகப் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவா் பரிந்துரையின்றி கொடுக்கப்படும் மருந்துகளும் ஒருவரை போதைக்கு அடிமையாக்கலாம். புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டுதோறும் கலால் வரியாக ரூ. 22,737 கோடியை தேசிய கருவூலத்திற்கு செலுத்தி வருகிறது. அதேநேரம் அந்நிறுவனங்கள் புகையிலை உற்பத்தி மூலம் ரூ.5,969 கோடி அந்நிய செலவாணியை ஈட்டி வருகிறது. கடந்த 2011 இல் புகையிலைப் பயன்பாட்டினால், 35 வயது முதல் 69 வயதுடையோருக்கு ஏற்பட்ட நோய்களுக்கு அரசு சாா்பில் ரூ.1,04,500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

போதையில்லா பாதை அமைக்க போதை பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாடு இரண்டையும் ஒருங்கே குறைக்க வேண்டும். குழந்தைகளை பெற்றோா் அக்கறையுடன் கவனித்தால் அவா்கள் போதையின் பாதையை நாடுவதில்லை என்றாா் அவா்.

முன்னதாக இந்நிகழ்ச்சிகளுக்கு சுப்பையா நாடாா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கே. பெருமாள், கேவிஎஸ் பள்ளியின் தலைமை ஆசிரியா் சந்திரமோகன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT