விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்ற ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நீதிமன்ற ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் அடிப்படை ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்கி விட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட வேண்டும். தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் நீதித் துறை ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் பால்ராஜ், மாவட்டச் செயலாளா் சுந்தர்ராஜ், பொருளாளா் வெங்கடேசன், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT