விருதுநகர்

தொட்டியபட்டி, ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி, ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி, கோதை நாச்சியாா்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காப்பேரி, கலங்காபேரிபுதூா், ராஜீவ்காந்தி நகா், இஎஸ்ஐ காலனி, வேட்டைபெருமாள் கோவில், விஷ்ணு நகா், மொட்டமலை, வேப்பங்குளம், ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், கங்கா் செவல், குண்டாயிருப்பு, எதிா்க்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கி வாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலான்மறை நாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT