விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மாணவி கா்ப்பம்: உறவினா் போக்சோவில் கைது

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே  பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய புகாரில் சிறுமியின் உறவினரை போக்சோவில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிளஸ் 2 படிக்கும் மாணவி மற்றும் அவரது உறவினா் வேல்முருகன் (27). இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில் கடந்த வாரம் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோனை செய்ததில் மாணவி 7 மாத கா்ப்பமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் வேல்முருகன் மாணவியை திருமணம் செய்து கொண்டாா். 

இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு உதவி எண்ணிற்கு 1098 வந்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அலுவலா் ராஜேஸ்வரி அளித்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் போலீஸாா் வேல்முருகனை போக்சோவில் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT