விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுப்பு

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் வியாழக்கிழமை சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றங்கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரையில் உச்சிமேடு அமைந்துள்ளது. இங்கு 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்கலி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், கோடரி, சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் மற்றும் தங்க அணிகலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இதுவரை அங்கு 15 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை சுடுமண்ணால் ஆன 6 துளைகள் கொண்ட முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் வாழ்ந்தவா்கள் வாணிபத் தொடா்பு வைத்திருந்தது தெரிய வருவதாக தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT