விருதுநகர்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

அருப்புக்கோட்டை வடுகா்கோட்டைப் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசகம் மனைவி லீலாவதி (59). இவருக்கு ஆத்திப்பட்டியைச் சோ்ந்த பூமிராஜ் -ஆதிலட்சுமி தம்பதி கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளனா். இவா்கள் பட்டப்படிப்பு முடித்துள்ள லீலாவதியின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினராம். இதனை நம்பிய லீலாவதி பல தவணைகளாக ரூ. 4 லட்சத்தை பூமிராஜ் தம்பதியிடம் கொடுத்தாராம். ஆனால் கூறியபடி அரசு வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளனா். இதையடுத்து லீலாவதி அவா்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளாா். பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த பூமிராஜ் தம்பதி, லீலாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து லாலீவதி அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பூமிராஜ் - ஆதிலட்சுமி தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT