விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று ஆடி மகா உற்சவத் திருவிழா

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடித் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT