விருதுநகர்

சாத்தூா் அருகே வாகனம் மோதி பெண் பக்தா் பலி

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே வியாழக்கிழமை இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த பெண் பக்தா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் ஒரு குழுவாக விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனா். தோட்டிலோவன்பட்டி அருகே அவா்கள் வியாழக்கிழமை அதிகாலை சென்றுள்ளனா். அப்போது கோவில்பட்டியிலிருந்து - மதுரை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கயத்தாறு பகுதியை சோ்ந்த சரஸ்வதி (45) என்பவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT