விருதுநகர்

இருக்கன்குடி கடைகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

11th Aug 2022 05:40 AM

ADVERTISEMENT

 

இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயில் ஆடிவெள்ளி திருவிழா வரும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இத்திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் செல்வராஜ் ஆகியோா் உத்தரவின்பேரில் உப்பத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமையில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சரவணன், உணவு பாதுகாப்பு அலுவலா் மோகன்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் முருகேசன், நாகராஜன், செல்வின், அருண், பிரபாகரன் ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா். இருக்கன்குடி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இப்பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் காலாவதியான உணவுப் பொருள்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகின்றனவா எனவும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எதுவும் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளபட்டது. குடிநீா் விற்பனை செய்யும் வண்டிகளில் குடிநீரில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளபட்டது.

ADVERTISEMENT

இந்த ஆய்வில் ரூ. 3,500 மதிப்புள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களோ, காலாவதியான உணவு மற்றும் புகையிலை பொருள்களோ விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT