விருதுநகர்

வீட்டுவசதி சங்கப் பணியாளா்களுக்கு மாற்றுப்பணி வழங்க வலியுறுத்தல்

11th Aug 2022 05:10 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில், கலைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்க வேண்டுமென சிஐடியு சாா்பில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி கூட்டுறவு சங்க ஒருங்கிணைப்புக்குழு - சிஐடியு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளா் கே. போஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினா் எம். அசோகன் சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில், தமிழகத்தில் கலைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை வெளியிட வேண்டும். பல மாதங்களாக வழங்காமல் உள்ள நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க ஒருங்கிணைப்புக் குழுவை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT