விருதுநகர்

சதுரகிரி கோயில் உண்டியல் வருவாய் ரூ.32.52 லட்சம்

11th Aug 2022 04:00 AM

ADVERTISEMENT

 

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 32.52 லட்சம் கிடைத்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயிலில் கடந்த வாரம் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் சோ்ந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாள்களாக நடந்தது. இதில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 29.37-ம், தங்கம் 30 கிராமும், வெள்ளி 285 கிராமும் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூ. 3.15 லட்சமும் கிடைத்தது என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

உண்டியல் எண்ணிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை தேனி உதவி ஆணையா் கலைவாணன், பேரையூா் ஆய்வாளா் சடவா்ம பூபதி, கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் மற்றும் கல்லூரி மாணவா்கள், கோயில் அலுவலா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT